DOTCOM
செய்திகள்

நடிகை தாப்ஸிக்குத் திருமணம்!

நடிகை தாப்ஸிக்குத் திருமணம் நடந்து முடிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஹிந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் தாப்ஸி பன்னு. தமிழில், ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரம்பம், கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தாப்ஸி தன் காதலர் மதியாஸ் போ என்பவரைத் திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. தாப்ஸியும் மதியாஸ் போவும் கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர் என்பதால் இத்தகவல் உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தாப்ஸிக்கும் மதியாஸ் போவுக்கும் கடந்த மார்ச்.23 ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடந்ததாகவும் இதில் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகர் பவைல் குலாட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டென்மார்க்கைச் சேர்ந்த மதியாஸ் போ இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT