செய்திகள்

இயக்குநராக அறிமுகமாகும் எழுத்தாளர்!

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.

DIN

தமிழ் இலக்கியத்தில் கவனிக்கும் எழுத்தாளராக இருப்பவர் லக்ஷ்மி சரவணகுமார். இவர் எழுதிய ‘உப்புநாய்கள்’, ‘கொமோரா’, ‘ரூஹ்’ நாவல்கள் விமரசனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றன. 'கானகன்’ நாவலுக்காக சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருதை வென்றார்.

இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய லக்ஷ்மி சரவணகுமார் பல படங்களுக்கு திரைக்கதை, வசன பங்களிப்பைச் செய்திருக்கிறார். குறிப்பாக, விரைவில் வெளியாகவுள்ள இந்தியன் - 2 படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

லக்ஷ்மி சரவணகுமார்

இந்த நிலையில், டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் விகடன் டெலிவிஷன் தயாரிப்பில் உருவாகும் இணையத் தொடர் ஒன்றை இயக்க லக்ஷ்மி சரவணகுமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

இவரே எழுதி, இயக்கும் இத்தொடருக்கு ‘லிங்கம்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில், நடிகர் கதிர் நாயகனாக நடிக்கிறார். மதுரை பின்னணியில் உருவாகும் இத்தொடரை ஹாட்ஸ்டார் ஓடிடி வெளியிட உள்ளது. விலங்கு இணையத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் மேற்பார்வையில் இத்தொடர் உருவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT