செய்திகள்

தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்: சாரா அலிகான் வருத்தம்!

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் தொழில்முறை புகைப்பட கலைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DIN

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் தொழில்முறை புகைப்பட கலைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாரா அலி கான் தனது முதல் படத்தை சுஷாந்த் சிங் உடன் நடித்தார். அப்படத்தின் பெயர்- கேதர்நாத். இப்படத்தினை அபிஷேக் கபூர் இயக்கி 2018இல் வெளியாகியது. இந்து மதத்தினைச் சேர்ந்த பெண், முஸ்லீம் ஆணை காதலிப்பது போன்ற கதை. 2013 அன்று கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடிப்படையாகவும் அந்த காதலையும் தொடர்புபடுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படம் இருவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.

நடிகர் தனுஷுடன் அட்ரங்கி ரே எனும் படத்தில் நடித்துள்ளார். தமிழில் கல்யாண கலாட்டா என்ற பெயரில் வெளியானது. இதில் வரும் சக்க சக்க பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை நிறத்தில் டி ஷர்ட், கருப்பு நிற பேண்ட் உடன் காணப்பட்ட சாரா அலிகானை பபராஸி எனப்படும் தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்தார்கள். இதனைக் கண்டித்து நடிகை சாரா அலிகான், “தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் நடிகைகளுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரம் இல்லை. அவர்கள் எங்கு சென்றாலும் கேமிராவில் மாட்டிக்கொள்கிறார்கள். நடிகை தாப்ஸி இதுகுறித்து பலமுறை ஆதங்கமாக பேசியுள்ளார். தற்போது இந்தப் பட்டியலில் சாரா அலிகானும் இணைந்துள்ளார்.

கடந்த மார்ச் 21ஆம் நாள் சாரா அலிகான் நடிப்பில் ஏ வாடன் மேரி வாடன் எனும் படம் அமேசான் பிரைமில் வெளியானது. தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை சாரா அலிகானுக்கு இன்ஸ்டாகிராமில் 45.2 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT