செய்திகள்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

பிரபல நடிகை தன் கருமுட்டையைப் பாதுகாத்து வைத்திருப்பதை அறிவித்துள்ளார்.

DIN

தமிழில் பட்டாஸ், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா படங்களில் நாயகியாக நடித்தவர் மெஹ்ரின் பிர்சாடா. இவர், தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மெஹ்ரின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மெஹ்ரின்

அதில், ”இரண்டு ஆண்டுகளாக யோசித்து இறுதியாக இதைச் செய்திருக்கிறேன். கருமுட்டைகளைப் பாதுகாப்பது குறித்து வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கிறோம். திருமணத்தையும் குழந்தை பெறுவதையும் தள்ளிப்போட விரும்பும் பெண்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பின்னால் வரும் பிரச்னைகளைத் தடுப்பதில் என்ன தயக்கம்?

எல்லாப் பெண்களும் இதைச் செய்யலாம் என நினைக்கிறேன். எனக்கும் தாயாக வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. ஆனால், கொஞ்சம் காலதாமதமாகிவிட்டது என எதிர்காலத்தில் தாய்மையை இழக்க விரும்பவில்லை. அதனால், கருமுட்டையைப் பாதுகாத்திருக்கிறேன். எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.

மெஹ்ரினின் இச்செயலை சிலர் பாராட்டுவதுடன் கருமுட்டைகளை உறையச் செய்து பாதுகாக்கும் தகவல்களையும் கேட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT