பிரபல பாடகர், இசையமைப்பாளர் அரிஜித் சிங் பின்னணி பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
இந்தியளவில் மிகப்பிரபலமான பாடகர்களில் ஒருவர் அரிஜித் சிங். இசையமைப்பாளராகவும் பல திரைப்படங்களுக்கு சிறந்த இசையைக் கொடுத்துள்ளார்.
தமிழில், ‘நான் உன் அழகினிலே’, அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி வரவேற்பைப் பெற்றார். பாலிவுட்டில் பல பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் அரிஜித் சிங் இல்லாமல் நடைபெறுவது இல்லை.
இந்த நிலையில், அரிஜித் சிங் திரைப்படங்களில் பின்னணி பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், திரைப்படங்களுக்கு இசையமைப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இருந்தும், பாடகர் அரிஜித் சிங்கை நேசிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.