வைரலில் மிரட்டும் அனிருத்தின் பின்னணி இசைகள்!
அனிருத் பின்னணி இசைகள் குறித்து....
இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசைகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
இசையமைப்பாளர் அனிருத் 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இசைப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். பாடகராக, இசையமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக என இந்தியளவில் செல்வாக்குடன் இருக்கும் பிரபலங்களில் ஒருவராகவும் உள்ளவர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.
Advertisement
Advertisement
இத்தனையாண்டு கால தன் இசைப் பயணத்தில் சினிமாவில் நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும், பின்னணி இசையென வந்துவிட்டால் அனிருத்தான் என்கிற சிறப்பையும் வைத்திருக்கிறார்.
ஆனால், இடையே சில ஆண்டுகள் அனிருத்தின் இசையில் பெரிதாக பின்னணி இசைகள் கவனிக்கப்படமால் இருந்தன. அதனை ஊகித்துக்கொண்டவர், தற்போது பின்னணி இசைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
முக்கியமாக, லியோ திரைப்படத்திற்குப் பின் ஜெயிலர், விடாமுயற்சி, கூலி ஆகிய படங்களின் பாடல்களும் பின்னணி இசையையும் பெரிதாகக் கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிகம் ரீல்ஸ் செய்யப்பட்ட இசைகள் என்கிற சாதனையையும் படைத்தன.
இந்த நிலையில், ரஜினியின் 173-வது திரைப்படம், ரஜினி - கமல் திரைப்படம், அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் திரைப்படம், நானியின் பாரடைஸ் என இப்படங்களுக்கான அறிமுக புரமோ இசையை உருவாக்கி அதிலும் அட்டகாசமான வரவேற்பை அனிருத் பெற்றுள்ளார்.
முக்கியமாக, ரஜினி - 173 மற்றும் அல்லு அர்ஜுன் திரைப்படங்களுக்கான பின்னணி இசை துணுக்குள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் அளவிற்கு ரீல்ஸ்களில் இடம்பெற்று வருகின்றன. மேலும், நேற்று (பிப். 24) வெளியான பாரடைஸ் திரைப்படத்தின் முதல் பாடலான ஆயாசேர் (aayasher) பாடலும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுபோக, ஜெயிலர் - 2, ஷாருக்கானின் கிங் ஆகிய திரைப்படங்களுக்கு எப்படியான பின்னணி இசையைக் கொடுப்பார் என ரசிகர்களுக்கு ஆவலும் எழுந்துள்ளது.
anirudh's recent background musics are hitting on social medias
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.