FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராஜா சம்பவம்... டோரதி பின்னணி இசைகள் வெளியீடு!

டோரதி பின்னணி இசைகள் வெளியானது....

6 செப்டம்பர் 2026, 10:52 am IST
இசையமைப்பாளர் இளையராஜா
பகிர்:

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவான டோரதி திரைப்படத்தின் பின்னணி இசைகள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள புதிய திரைப்படம் டோரதி. மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 90-களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்பாடல்களால் இளையராஜாவை இன்றைய இளைஞர்களும் இசையும் வரியும் சுத்தமாக இருக்கிறது எனப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், டோரதி திரைப்படத்தின் பின்னணி இசைகளையும் வெளியிட்டுள்ளனர். இதில், 18 பின்னணி இசைத்துணுக்குகள் இடம்பெற்றுள்ளன.

முக்கியமாக, இளையராஜாவின் சிறந்த பிஜிஎம்-களில் ஒன்றான how to name it ஆல்பத்தில் இடம்பெற்ற do anything இசையை இப்படத்திற்காக நவீனப்படுத்தியுள்ளார். மேலும், ஏதும் இல்லை, சம்பவம், பிரியாவிடை உள்ளிட்ட பின்னணி இசைகள் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

The background score for the film Dorothy, composed by Ilaiyaraaja, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments