டி. ராஜேந்தர் இசையமைப்பில் முதல்முறையாக பாடிய இளையராஜா!
டி. ராஜேந்தர் இசையில் பாடிய இளையராஜா...
இசையமைப்பாளர் இளையராஜா நடிகர் டி. ராஜேந்தர் இசையில் முதல்முறையாகப் பாடியுள்ளார்.
எம். பி. எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிப்பில் ஆர். கோபி வழங்கும், 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்தை 'சிங்கம் புலி', 'மொட்ட சிவா கெட்ட சிவா' படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார்.
பன்முகத் திறமையாளரான டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், அண்மையில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாக இது அமைந்துள்ளது. டி. ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படம் 'கன்னடத்து பைங்கிளி' என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகனின் தந்தையாக படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்தார்.
Advertisement
Advertisement
சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இதுதான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர். இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக் மற்றும் இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் ஸ்ரீகாந்த் ஐயங்கார் எனும் தெலுங்கில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர் அறிமுகம் ஆகிறார். கர்நாடகாவில் இருந்து ஸ்வேதா எனும் நடிகையும் அறிமுகமாகிறார்.
தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
Music composer Ilaiyaraaja has sung for the first time to the music of actor T. Rajendar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.