FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இளையராஜாவுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆஸ்திரேலியா!

இளையராஜாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்...

23 செப்டம்பர் 2026, 12:03 pm IST
இசையமைப்பாளர் இளையராஜா
பகிர்:

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆஸ்திரேலிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். திரைப்பட பாடல்கள், பின்னணி இசைகள், ஆன்மீகப் பாடல்கள், இசைக்கச்சேரிகள், சிம்பொனி என இசையில் அனைத்து வகை பங்களிப்பையும் செய்தவர் என்பதால் பல கோடி ரசிகர்களின் விருப்பமான இசையமைப்பாளராக உள்ளார்.

இந்திய இசைக் கலைஞர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் என்பதால் உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் இளையராஜா மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இசைத்துறையில் இளையராஜா 50 ஆண்டுகளாக செய்த சிறப்பான பங்களிப்பைப் போற்றும் விதமாக, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கான அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு ஆஸ்திரேலிய அரசிற்குத் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்குக் கிடைத்த இந்த மரியாதையை அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர்.

The Australian government has issued a postage stamp featuring music composer Ilaiyaraaja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments