கார் தாக்குதலில் படுகாயம்! ஆஸ்திரேலிய பெண் எம்.பி.யின் 2 கால்களும் அகற்றம்!
கார் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பெண் எம்.பி.யின் 2 கால்களும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது குறித்து...
ஆஸ்திரேலியாவில், கார் தாக்குதலுக்கு ஆளான பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் 2 கால்களும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வாங்கரட்டா நகரத்தில் கடந்த திங்களன்று (அக். 21) சுயட்ச்சை நாடாளுமன்ற உறுப்பினரான ஹெலன் ஹெய்ன்ஸ் (வயது 65) என்பவர் மீது பிரெண்டன் நுகெண்ட் (43) எனும் நபர் காரால் மோதி தாக்குதல் நடத்தினார்.
முதல்முறை ஹெலன் மீது காரால் மோதிய நுகெண்ட் உடனே தனது காரை பின்னால் கொண்டு சென்று மீண்டும் அவர் மீது மோதி அவரை மற்றொரு காருடன் வைத்து நசுக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த ஹெலன் ஹெலிகாப்டர் மூலம் மெல்பர்ன் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மெல்பர்ன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஹெலனின் 2 கால்களும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும்; இருப்பினும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரது கணவர் ஃபில் ஹெயின்ஸ் இன்று (அக். 21) தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரெண்டன் நுகெண்ட் உளவியல் மற்றும் நரபியல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுக்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
In Australia, a female MP who was hit by a car has reportedly had both legs surgically removed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.