பஞ்சாப்: பதான்கோட்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி முனையில் கார் திருட்டு!
பதான்கோட்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி முனையில் கார் திருடப்பட்ட சம்பவம் பற்றி....
பதான்கோட்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி முனையில் கார் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பதான்கோட்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டவுன்டவுன் பகுதியில், பதான்கோட்டைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான எஸ்யூவி ரக கார், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், அடையாளம் தெரியாத நபர், வாகன ஓட்டுநரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அந்த வெள்ளை நிற எஸ்யூவி காரைத் திருடிச் சென்றார். இந்த வாகனம் பதான்கோட்டின் பாமியல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதான்கோட் மூத்த காவல் கண்காணிப்பாளர் மன்பிரீத் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினருக்கு முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறினார். விசாரணையின்படி, அந்த வாகனம் குர்தாஸ்பூர் பகுதி நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
வாகனத்தைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.