கோவையில் பேருந்தில் மோதி கண்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார்: கணவன், மனைவி பலி
கோவை நீலாம்பூரில் பேருந்தில் மோதிய கார் கண்டெய்னர் லாரிக்குள் புகுந்ததில் காரில் இருந்த கணவன், மனைவி இருவரும் பலியானது குறித்து...
கோவை நீலாம்பூரில் பேருந்தில் மோதிய கார் கண்டெய்னர் லாரிக்குள் புகுந்ததில் காரில் இருந்த கணவன், மனைவி இருவரும் பலியாகினர்.
கோவையில் இருந்து கொச்சின் பைபாஸ் சாலை வழியாக திருப்பூர் நோக்கிச் சென்ற கார், கோவை நீலாம்பூர் அருகே வெங்கிட்டாபுரம் பிரிவு பகுதியில் புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
முன்னால் சென்ற பேருந்து மீது மோதிய கார், தொடர்ந்து இடதுபுறம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ரவிக்குமார்( 56) சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி கிருஷ்ணவேணி(42) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து நீலாம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.