FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோவையில் புழுதி பறக்க சீறிப்பாய்ந்த கார்கள்!

கோவையில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்ச்சி தொடர்பாக...

21 செப்டம்பர் 2026, 1:42 pm IST
புழுதி பறக்க சீறிப்பாய்ந்த கார்கள். - படம்: தினமணி
பகிர்:

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில் புழுதி பறக்க சீறிப்பாய்ந்த கார்களின் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஃபெடரேசன் ஃபார் மோட்டார் ஸ்போர்ட்ஸ் இண்டியா அமைப்பு சார்பில் நாட்டின் பல்வேறு இடங்களில் புழுதி பறக்கும் திடல்களில் தேசிய அளவிலான கார் பந்தயங்களை நடத்தி வருகின்றன.

இதன்படி, 2வது சுற்றுப் போட்டிகள் கோவை அடுத்த சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் பகுதியில் நடைபெற்றது. நேற்றும், இன்றும் நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட கார் பந்தய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

பொட்டல் காட்டில் புழுதி பறக்க அதிவேகத்தில் சீறிப்பாய்ந்து வந்த இந்த கார்களை, பார்வையாளர்கள் ஆச்சரியத்துடனும், உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, கர்நாடக மாநிலம் குடகுவில் நடைபெறும் 3ம் சுற்று போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

போட்டியில் பங்கேற்று பல்வேறு சுற்றுகளில் முன்னிலை வகித்த வீரர்களான, டீன் மெக்கரினாஸ், ககன் கரும்பையா, ஷிவானி பிருத்வி ஆகியோர் கூறும் போது, கோவையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ரசிகர்களிடையே கார் பந்தயங்களுக்கு இருக்கும் ஆர்வம் ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த சுற்றில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு புளுபேண்ட் ஸ்போர்ட்ஸ் ரேளி ஆப் கோயம்புத்தூர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

summary

At the national-level car race held in Coimbatore, the sight of speeding cars zooming past and kicking up clouds of dust captivated the spectators.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments