தலைசிறந்த ஆஸ்திரேலிய வீரராக அறிமுகம்..! மாலி பியர்ட்மேன் புதிய சாதனை!
அறிமுக ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் மாலி பியர்ட்மேன் குறித்து...
ஆஸ்திரேலிய வீரர் மாலி பியர்ட்மேன் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் கிரிக்கெட் திடலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Advertisement
Advertisement
முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக இந்த அணியில் கஸ் அட்கின்சன் 29, வில் ஜாக்ஸ், டாம் பான்டன் தலா 25 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா சார்பில் அறிமுக வீரர் மாலி பியர்ட்மேன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதுவரையிலான ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒருநாள் அறிமுக போட்டிகளில் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாலி பியர்ட்மேன் மாறியுள்ளார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு டோனி டோடெமெய்ட் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
அறிமுக ஒருநாள் போட்டியில் அசத்திய ஆஸி. வீரர்கள்
1. மாலி பியர்ட்மேன் - 6/24 (2026)
2. டோனி டோடெமெய்ட் - 5/21 (1988)
3. ஜேவியர் பார்ட்லெட் - 4/17 (2024)
4. ஸ்டூவர்ட் மேக்கில் - 4/19 (2000)