ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..!அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மாலி பியர்ட்மேன்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய அறிமுக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் குறித்து...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய அறிமுக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மாலி பியர்ட்மேன் 28 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
21 வயதான மாலி பியர்ட்மேன் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். முதல் ஒருநாள் போட்டியிலேயே பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.
இதன்படி பெர்த்தில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இளம் வீரர் மாலி பியர்ட்மேன் ஜோ ரூட்டை முதல் விக்கெட்டாக எடுத்தார். அடுத்ததாக ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், சாம் கரண், லியாம் டாசன் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
வெறுமனே 28 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரேயொரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
முன்னதாக 2014 யு19 கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார். அப்போதை பலரையும் வியக்கவைத்தவர் இன்று சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இங்கிலாந்து அணி 27 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் வில் ஜாக்ஸ் - கஸ் அட்கின்ஷன் விளையாடி வருகிறார்கள்.