கலையும் ஆன்மீகமும் ஒன்றுதான்: இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜாவின் பேச்சு வைரல்...
இசையமைப்பாளர் இளையராஜா கலை குறித்து தன் பார்வையைக் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதுரையைப் பின்னணியாகக் கொண்ட இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் பெரியளவில் ஹிட் அடித்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் செய்த விடியோவை வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
அதில், இளையராஜா, “இலக்கியம் மீது பெரிய நாட்டம் இல்லை. எனக்கு எப்போதும் இசைதான். ஆனால், 2000-க்குப் பின் கணினிகளின் வருகையையொட்டி இசைக்குறிப்புகளை உள்ளீடு செய்வதற்கான வசதி ஏற்பட்டது. நான் எழுதிக்கொடுத்தால் அதனை கணினிக்கு மாற்ற 2 மணி நேரங்கள் ஆகும். அதுவரை ஏன் சும்மா இருக்க வேண்டும்? என வெண்பாக்களை எழுத ஆரம்பித்தேன். ஆனால், யோசித்தபடி எழுதியபோது இலக்கணப் பிழை வந்தது. எழுதுவது சரியாக இருந்தால் சிந்தித்தது தவறாக இருக்கும். தொடர்ந்து முற்சித்து பாடல்களை இலக்கணத்துடன் எழுத ஆரம்பித்தேன்.
ஒரு நள்ளிரவில் எழுந்த போதுதான் நான் கடவுளில் இடம்பெற்ற பிச்சைப் பாத்திரம் பாடலை எழுதினேன். அதிகாலையைப் போல் இருந்த அந்த நேரத்தில் ஏதோ உந்துததில் அப்பாடலை எழுத அமர்ந்ததும் வார்த்தைகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. ‘பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே..’ வரியெல்லாம் வேறு யாரும் எழுதாத விஷயம். கலையும் ஆன்மீகமும் வேறு வேறில்லை. இரண்டும் ஒன்றுதான். அதனை வேறுபடுத்தினால் செயற்கையாகிவிடும். அதை வேறுபடுத்திச் சொல்ல நான் அரசியல்வாதி இல்லை. என்னைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான்.” எனத் தெரிவித்துள்ளார்.
Music composer Ilaiyaraaja has shared his perspective on art.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.