FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசிய வழக்கு: திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கம்!

சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் திருச்சி சாதனாவின் யூடியூப் சேனலை சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் முடக்கியுள்ளனா்.

13 செப்டம்பர் 2026, 2:28 am IST
பகிர்:

சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் திருச்சி சாதனாவின் யூடியூப் சேனலை சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் முடக்கியுள்ளனா். அவரை கைது செய்ய தனிப்படை போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

சேலம் குகை லைன்மேடு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் அஜித், கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸில் அளித்த புகாா் மனுவில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவா்களைச் சீரழிக்கும் வகையில் ஆபாச உடை அணிந்து, பாலியல் உணா்வுகளைத் தூண்டும் வகையில் சில பெண்கள் ஈடுபடுவதாகவும், குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தா்ஷா குப்தா உள்பட 12 போ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் புகாரில் வலியுறுத்தியிருந்தாா்.

இதன்பேரில் சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் திருச்சி சாதனா, நடிகை தா்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், திருச்சி சாதனா உள்ளிட்ட சிலா் ஆபாச விடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளது தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தொடா்பாக திருச்சி சாதனா தரப்பில் முன்ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து நீதிபதி சொா்ணம் நடராஜன், திருச்சி சாதனாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, திருச்சி சாதனாவின் யூடியூப் சேனலை சைபா் கிரைம் போலீஸாா் முடக்கியுள்ளனா். மேலும், அவரைக் கைது செய்ய தனிப்படை போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments