முகப்பு
செய்திகள்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

அரிஜித் சிங்குடன் ஆமீர் கான்...

Updated On : 23 பிப்ரவரி 2026, 3:51 pm IST
அரிஜித் சிங், ஆமீர் கான்
பகிர்:

பிரபல பாடகர், இசையமைப்பாளர் அரிஜித் சிங்கை நேரில சந்தித்து பாட வைத்துள்ளார் ஆமீர் கான்.

இந்தியளவில் மிகப்பிரபலமான பாடகர்களில் ஒருவர் அரிஜித் சிங். இசையமைப்பாளராகவும் பல திரைப்படங்களுக்கு சிறந்த இசையைக் கொடுத்துள்ளார்.

தமிழில், நான் உன் அழகினிலே, அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி வரவேற்பைப் பெற்றார். பாலிவுட்டில் பல பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் அரிஜித் சிங் இல்லாமல் நடைபெறுவது இல்லை.

Advertisement

Advertisement

இப்படியான அரிஜித் சிங், சில மாதங்களுக்கு முன் திரைப்படங்களில் பின்னணி பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேநேரம், திரைப்படங்களுக்கு இசையமைப்பேன் எனத் தெரிவித்திருந்தார். இருந்தும், பாடகர் அரிஜித் சிங்கை நேசிப்பதாக பலரும் உருக்கமாக பதிவிட்டனர்.

இந்த நிலையில், நடிகர் ஆமீர் கான் தன் தயாரிப்பில் உருவாகும் ’ஏக் தின்’ என்கிற திரைப்படத்தின் அறிமுக பாடலைப் பாட, மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்று அங்கு சொந்த கிராமத்திலிருந்த அரிஜித் சிங்கைச் சந்தித்தார். சந்திப்பின்போது, தொடர்ந்து பாடுங்கள் என கோரிக்கை வைத்ததுடன் தன் படத்திற்காக பாட வைத்துள்ளார். இவர்களின் விடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.