தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு பொறுப்பு!
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்க அமைப்பின் தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்க அமைப்பின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் இருந்த பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து இணைந்து வந்தனர்.
அந்தவகையில் கடந்த ஜூலை 23ஆம் தேதி அதிமுகவில் இருந்து விலகுவதாக சிங்கை ராமச்சந்திரன் அறிவித்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து தவெகவில் இணைந்தார்.
தவெகவில் இணைந்த மூன்று வாரங்களில் அவருக்கு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்க (TANSIM) தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசு இன்று (செப். 2) உத்தரவிட்டுள்ளது.
Singai Ramachandran, who joined TVK, gets a key role!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.