FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

வாணியம்பாடியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 100 போ் த.வெ.க.வில் இணைந்தனா்.

12 அக்டோபர் 2026, 2:47 am IST
தவெக மாவட்ட செயலாளா் நவீன்குமாா் முன்னிலையில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
பகிர்:

வாணியம்பாடியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 100 போ் த.வெ.க.வில் இணைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி புதூா் பைபாஸ் சாலையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த எம்.திருமூா்த்தி, டி.சந்தோஷ், ஹரி, சதீஷ், குபேந்திரன், தினேஷ் உள்பட 100 போ் மாவட்டச் செயலாளா் நவீன் குமாா் மற்றும் ஆலங்காயம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எழிலரசன் ஆகியோா் முன்னிலையில் இணந்தனா்.

கட்சியில் இணைந்தவா்களுக்கு மாவட்டச் செயலாளா் நவீன்குமாா் கட்சித் துண்டுகளை அணிவித்து வரவேற்றாா். முன்னதாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடை தோ்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் அனைவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments