மாற்றுக் கருத்துக்கே இடமில்லை! 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும்! அமைச்சர் வினோத்
கடந்த முறை வாக்களிக்காதவர்களும் இம்முறை ஆதரவு தருவார்கள் அமைச்சர் வினோத் நம்பிக்கை...
இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளும் தவெக வெற்றி பெறும், அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என வேளாண் துறை அமைச்சர் வினோத் பேட்டியளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தினர் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 400 மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். வேளாண் துறை அமைச்சர் வினோத், மற்றும் மாவட்ட ஆட்சியர் ரேவதி கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து பரிசுப் பொருள்களை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண் துறை அமைச்சர் வினோத்,
Advertisement
Advertisement
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து பெண்களுக்கான வளை காப்பு விழா நகராட்சி திருமண அரங்கில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் இன்று வரை 60 மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 22ஆம் தேதி பிறகு வரிசை பிரகாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், நடைபெறும் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளும் தவெக வெற்றி பெறும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்களிக்காத வேட்பாளர்கள் கூட இந்த தேர்தலில் தவெக-க்கு வாக்களிப்பதற்காக காத்து உள்ளனர் நிச்சயமாக இரண்டு தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்
விவசாயிகளுக்கான விதை மானியம் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு ஒரு சில இடங்களில் இந்த குளறுபடிகள் நடைபெற்று வருகிறது விரைவில் அது சரி செய்யப்படும் என அமைச்சர் வினோத் தெரிவித்தார்
திருவாரூர் போன்ற மாவட்டங்களில் காவிரி நீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறனர் என்ற கேள்விக்கு மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளோம் ஒரு சில நாள்களில் அது சரி செய்யப்படும் என மேலும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.