செய்திகள்

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

நடிகை கங்கனா ரணாவத் சினிமாவிலிருந்து விலகுவது குறித்து பேசியுள்ளார்.

DIN

ஹிமாசல பிரதேசம் மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ராணவத் களமிறங்கியுள்ளார்.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கங்கனா, தலாய் லாமா உள்பட முக்கியமான ஆன்மீக தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கங்கனாவிடம், “தேர்தலில் போட்டியிடுவதால், ஹிந்தி திரையுலகிலிருந்து விலகத் திட்டமிட்டிருக்கிறீர்களா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, கங்கனா “இப்போது, என்னால் பாலிவுட் சினிமாவிலிருந்து விலக முடியாது. காரணம், என் நடிப்பில் பல திரைப்படங்கள் நிலுவையில் உள்ளன. அவற்றின் பணிகள் முடிய வேண்டும்.” என பதிலளித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹிமாலச பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT