ரகசிய திருமண வதந்தி: கங்கனா ரணாவத் விளக்கம்
தனக்கு ரகசியமாகத் திருமணம் நடந்துவிட்டதாக வெளியான செய்திகளை நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் மறுத்துள்ளார்.
தனக்கு ரகசியமாகத் திருமணம் நடந்துவிட்டதாக வெளியான செய்திகளை நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் மறுத்துள்ளார்.
கங்கனா ரணாவத் தாலி அணிந்திருந்த புகைப்படம் ஒன்று வியாழக்கிழமை இணையத்தில் வைரலானது. இது அவர் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டாரோ என்ற யூகங்களுக்கு வழிவகுத்தது. தற்போது இந்த வதந்திகளுக்கு கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
தான் எப்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாலும், அது ரகசியமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், நான் ஒவ்வொரு நாளும் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பில் இருக்கிறேன். யாரோ ஒருவர் இந்த புகைப்படத்தை படப்பிடிப்பில் மேக்கப்புடன் எடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்போது எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திருமணமான பெண்ணின் தோற்றத்தில் அப்படி என்ன பெரிய விஷயம் இருக்கிறது? நடிகர்கள் அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்கள், நான் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், இது உறுதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கங்கனா கைவசம் தற்போது பல திரைப்படங்கள் உள்ளன. அதில், பாரத் பாக்ய விதாதா திரைப்படம் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து குயின் படத்தின் இரண்டாம் பாகத்திலும், ஆர். மாதவனுடன் இணைந்து அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Kangana Ranaut slammed reports claiming she secretly got married after being spotted with a mangalsutra and said she is shooting for her next film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.