செய்திகள்

நடிகர் ரஜினியை சந்தித்த ‘ஆர்டிஎக்ஸ்’ படக்குழு!

நடிகர் ரஜினிகாந்த் ஆர்டிஎக்ஸ் படக்குழுவுடன் சந்தித்த புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளன.

DIN

கேரளத்தில் ஓணம் வெளியீடாக திரைக்கு வந்த படம் ஆர்டிஎக்ஸ்- ராபர்ட் டோனி சேவியர். ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிப்பில் ஆக்சன் படமாக இது உருவாகியிருந்தது. அதேநாளில், கிங்க் ஆஃப் கொத்தா திரைப்படமும் வெளியானது. ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ரசிகர்கள் ஆர்டிஎக்ஸ் பக்கம் திரும்பினர். 

தமிழ் சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவு மாஸ்டர்கள் அட்டகாசமான சண்டைக் காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள். தமிழ் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மஹிமா நம்பியார் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். சண்டைக் காட்சிகள் பெரிதும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் ரஜினியுடன் இயக்குநர் நிகாஷ் ஹிதயாத்.

இப்படம் உலகளவில், ரூ.100 கோடியை வசூலித்தது. இந்நிலையில் இதன் இயக்குநர் நிகாஷ் ஹிதயாத் , சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் மாஸ்டர்கள் நடிகர் ரஜினியை சந்தித்தார்கள்.

நடிகர் ரஜினி வேட்டையன் படப்பிடிப்பில் இருக்கிறார். 80 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் ரஜினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT