முகப்பு
செய்திகள்

அன்னைகளால் நிறைந்த உலகம்..

நடிகை நயன்தாரா தன் மகன்களுடன் இருக்கும் விடியோ வைரலாகி வருகிறது.

Updated On : 12 மே, 2024 at 12:23 PM
பகிர்:

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

இக்குழந்தைகளின் புகைப்படங்களையும், காணொளிகளை அடிக்கடி இருவரும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் புதிய விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், நடிகை நயன்தாரா தன் இரு மகன்களின் சேட்டைகளைப் பொறுத்துக்கொண்டு அவர்களைக் கொஞ்சுவதும் கவனமாகப் பார்த்துக் கொள்வதுமாக இருக்கிறார். தற்போது, இந்த விடியோ வைரலாகி வருகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, மண்ணாங்கட்டி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →