செய்திகள்

புரோமோவில் கெட்ட வார்த்தை.. சர்ச்சையில் சந்தானம்!

இங்க நான்தான் கிங்கு படத்தின் புரோமோ விடியோவில் நடிகர் சந்தானம் கெட்ட வார்த்தை பேசியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

DIN

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ளார்.

நடிகை பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தில் தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இங்க நான்தான் கிங்கு திரைப்படம் மே.17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் புரோமோ விடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அந்த விடியோவில், நடிகர் சந்தானம் மோசமான கெட்ட வார்த்தையை ஒலிநீக்கம் (mute) செய்யாமல் அப்படியே பேசுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புரோமோவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என தயாரிப்பு நிறுவனத்தையும் நடிகர் சந்தானத்தையும் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

பிப். 21-இல் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா: பந்தல்கால் நடவு

அகில இந்திய தடகளம்: தங்கம் வென்றாா் சென்னை மாணவி

சுங்குவாா்சத்திரத்தில் உலக கம்மா மாநாடு

இன்றைய தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT