செய்திகள்

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படதில் அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் நடித்த சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் - 2, நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

சித்தார்த் நடிக்கும் 40 ஆவது படம் குறித்த அறிவிப்பை சாந்தி டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். விரைவில் படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து..! டி20 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை!

தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!

'நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும்'

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

SCROLL FOR NEXT