ஆமிர்கானின் தங்கல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சான்யா மல்ஹோத்ரா. பின்னர் இவர் நடித்த பாதாய் ஹோ, போட்டாகிராபி, லூடோ, காதல் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று தந்தன.
அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திலும் சான்யா மல்ஹோத்ரா நடித்திருந்தார். இவரது கதைத்தேர்வுகள் எப்போதும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
தமிழில் மீனாட்சி சுந்தரேஷ்வர் என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் தமிழ்ப் பெண்ணாக நடித்திருப்பார். மிகவும் அழகான கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.
32 வயதான சான்யா மல்ஹோத்ரா அட்லி தயாரிக்கும் பேபி ஜான் படத்திலும் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
மலையாளத்தில் மிகவும் கவனம் ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ஹிந்தி ரீமெக்கில் சான்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் பெயர் மிர்சஸ். இந்தப்படம்தான் நியூயார்க் திரைப்பட விழாவில் கடைசி படமாக திரையிடப்படவுள்ளது. மேலும் சிறந்த நடிகைக்கான போட்டியிலும் சான்யா தேர்வாகியுள்ளார்.
இது குறித்து படக்குழு உள்பட அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். நடிகை சான்யா, “நியூயார்க் விழாவில் எனது படம் தேர்வானது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ரிச்சா கதாபாத்திரத்தில் பாரம்பரிய, நோக்கம் உடைய, மதிப்புமிக்க கதாபாத்திரத்தில் நடித்தது மிகுந்த பெருமையாக இருக்கிறது. இதில் இந்திய பெண்களின் போராட்டத்தை எடுத்துக்காட்டியதுக்கு மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.