நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடிப்பார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, கலை இயக்குநர் ஜாக்கி, எடிட்டர் ஷபீக் முகமது அலி, சண்டைப் பயிற்சியாளர் கேச்சா கம்பக்டீ இப்படத்தில் இணைந்துள்ளதை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில், சூர்யா - 44 படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் ஜெயராம், உறியடி விஜய்குமார், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.