கோப்புப்படம் 
செய்திகள்

இந்த வார ஓடிடியில் வெளியாகிய திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.

ஆனாலும், இந்த வாரம் ஓடிடியில் எத்தனை புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி பிரதான பாத்திரத்தில் நடித்த வொயிட்ரோஸ் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

விநாயக் துரை இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடித்துள்ள வல்லவன் வகுத்ததடா திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

போனி கபூரின் மைதான் திரைப்படம் அமேசான் பிரைமிலும், தமன்குமார், எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பில் உருவான ஒரு நொடி திரைப்படம் ஆஹா ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

ரமேஷ் பாரதி இயக்கத்தில் பொன்வண்ணன், வனிதா, அஸ்வினி, நவீன், ஃபாரீனா என அதிகப்படியான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இணையத் தொடரான ‘உப்பு புளி காரம்’ ஹாட் ஸ்டாரில் மே 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

நடிகைகள் தபு, கரீனா கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹிந்தி திரைப்படமான 'க்ரூ' நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி டிரெண்டில் இணைந்த சிங்கப்பூர் காவல்துறை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மாணவிகள்!

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்!

லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

SCROLL FOR NEXT