முகப்பு
செய்திகள்

‘12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த அதே இடம்; ஆனால்..’ -விக்னேஷ் சிவன் பதிவு!

அதே இடத்தில் 12 ஆண்டுகள் பின்: விக்னேஷ் சிவன் அனுபவங்கள்!

Updated On : 31 மே, 2024 at 3:35 PM
பகிர்:

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

விக்னேஷ் சிவனும் நடிகை நயந்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். வாடகைத் தாய் மூலம் இரு ஆண் குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.

தங்கள் மகன்களுக்கு உலக் மற்றும் உயிர் என வித்தியாசமாக பெயரிட்டுள்ள இணையர்கள் அவ்வவ்போது மகன்களுடன் எடுத்த படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது ஹாங் காங் சுற்றுலா சென்றுள்ளவர்கள் அங்குள்ள டிஸ்னிலேண்ட் ரிசார்ட் முன்பு குழந்தைகளை ஏந்தியபடியும் டிஸ்னி கோட்டைக்கு முன்பு ஒன்றாக நிற்பது போலவும் எடுத்த படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “12 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் செருப்பு அணிந்து கையில் ஆயிரம் ரூபாய் பணத்தோடு போடா போடி படப்பிடிப்புக்கு அனுமதி பெற வந்துள்ளேன். தற்போது எனது அன்பு குழந்தைகள் குடும்பத்தோடு அதே இடத்தில் சந்தோசமாகவும் உணர்ச்சிமயமாகவும் நிறைவாகவும் உணர்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா நடித்து வெளியான ‘ஜவான்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அவர் நடித்த அன்னபூரணி படமும் சமீபத்தில் வெளியானது. விக்னேஷ் சிவன் லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →