செய்திகள்

நேரடி மலையாளப் படத்தில் சூர்யா!

நடிகர் சூர்யா மலையாளப் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

DIN

நடிகர் சூர்யா நேரடியான மலையாளப் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

கங்குவா திரைப்படம் நவ. 14 ஆம் தேதி வெளியாவதால் நடிகர் சூர்யா படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது, புரமோஷனுக்காக கேரளம் சென்றிருக்கிறார்.

நேற்று (நவ. 5) கொச்சி லூலூ வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற சூர்யாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அந்த இடமே மனித தலைகளாகக் காட்சியளித்தது.

இன்று, திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று ரசிகர்களைச் சந்திக்கிறார். தொடர்ந்து, நாளை (நவ.7) ஹைதராபாத் செல்கிறார்.

இந்த நிலையில், கேரள ரசிகர்களிடம் பேசியபோது நடிகர் சூர்யா, "நேரடியான மலையாளப் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. உறுதியாக, என்றாவது அது நிகழும்” எனத் தெரிவித்தார். இது, மலையாள ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT