செய்திகள்

இத்தனை பேரா? சூர்யாவை ஆச்சரியப்படுத்திய கேரள ரசிகர்கள்!

கங்குவா புரமோஷன் தீவிரம்...

DIN

நடிகர் சூர்யாவுக்கு கேரள ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மொழி ரசிகர்களிடமும் படத்தைச் சேர்ப்பதுடன் அதிக நேர்காணல்களில் கலந்துகொண்டு பல கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

தற்போது, புரமோஷனுக்காக கேரளம் சென்றிருக்கிறார். அங்கு நேற்று (நவ. 5) கொச்சி லூலூ வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற சூர்யாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அந்த இடமே மனித தலைகளாகக் காட்சியளித்தது.

இதை எதிர்பார்க்காத சூர்யா, “என்ன இது? இத்தனை பேரா? என் வாழ்க்கையில் இதை மறக்கவே மாட்டேன். அன்புதான் கடவுள் என படித்திருக்கிறேன். இதுதான் அன்பு. நீங்கள்தான் கடவுள். இவ்வளவு கூட்டம் கிடைத்திருப்பதை வரமாகவே பார்க்கிறேன். 2.5 ஆண்டுகள் கழித்து கங்குவா வெளியாகவுள்ளது. திரும்பவும் சொல்கிறேன். இப்படம் நெருப்பு மாதிரி இருக்கும். 3டி மற்றும் ஐமேக்ஸ் வடிவமும் வெளியாகிறது. நமக்கெல்லாம் இன்னொரு தீபாவளி கங்குவா.

நான் எப்படி நன்றாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அதேபோல் நீங்களும் நன்றாக இருப்பீர்கள். குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துங்கள். உங்களின் அன்பை என்ன சொல்வதன்றே தெரியவில்லை. நல்ல படங்களைக் கண்டிப்பாகக் கொடுப்பேன். என் சின்ன தம்பி துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படமும் நன்றாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதையும் பார்த்துவிடுங்கள். புதிய அனுபவத்துக்கு தயாராகுங்கள்” என தன் பேச்சில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தொழிலநுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி வெளியீட்டுத் தேதி!

தவெக மாநாடு: தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT