நடிகை பிரீத்தி ஜிந்தா 
செய்திகள்

விபரீத ஆசையால் 12 வயதில் பிரீத்தி ஜிந்தா செய்த சம்பவம்!

நடிகை பிரீத்தி ஜிந்தா தான் சிறு வயதில் மிகவும் குறும்புத்தனமான குழந்தையாக இருந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

DIN

ஹிந்தியில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிரீத்தி ஜிந்தா. 1998-ல் மணிரத்னம் படத்தில் அறிமுகமான பிரீத்தி ஜிந்தா பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜுன் குட்எனாஃப் என்பவரை கடந்த 2016 இல் திருமணம் செய்துகொண்டார். வாடகைத் தாய் மூலம் 2021இல் இரு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

கடைசியாக 2018இல் சன்னி தியோலுடன் நடித்தார். தற்போது, லாகூர் 1947 என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில், 12 வயதில் ராணுவ நிகழ்ச்சியொன்றைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, மார்புக் கச்சைக்குள் ஆரஞ்சு பழங்களை மறைத்துவைத்து, 18 வயதுப் பெண் போல சென்றதாகக் கூறியுள்ளார்.

பிரீத்தி ஜிந்தா கூறியதாவது:

நான் சிறிய வயதில் மிகவும் கலகக்கார குணத்துடன் இருந்தேன். மிகவும் குறும்புத்தனாமாகவும் இருப்பேன். நான் எனது அம்மாவை மிகவும் வெட்கப்படும்படி செய்துள்ளேன். நான் இப்போது வளர்ந்த பிறகு என்னுடைய நண்பர்களின் குழந்தைகளைப் பார்க்கும்போது கடவுளே, நல்லவேளை எனக்கு என்னை மாதிரியான குழந்தைகள் இல்லை என நினைத்துக் கொண்டேன்.

ஒரு குறிப்பிட்ட ராணுவ நிகழ்ச்சியில் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கலந்துகொள்ளக் கூடாது. எனக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தது. அதனால் எனது அம்மாவின் அலமாரிக்குச் சென்று அவரது மார்புக் கச்சையை எடுத்து அணிந்துகொண்டேன். பெரிய பெண்ணைப் போல தோன்ற வேண்டும் என்பதற்காக இரு ஆரஞ்சு பழங்களை உள்ளே திணித்துக்கொண்டேன். என்னை நானே ‘இப்போது எனக்கு 18. நான் போகலாமா’ எனக் கேட்டுக்கொண்டேன். நிகழ்ச்சியில் அங்கிருந்த ஒரு ஆண் என்னை ஒரு மாதிரி பார்த்தார்.

தெரிந்திருந்தால், நிச்சயமாக எனது அம்மா மிகவும் வெட்கப்பட்டிருப்பார். நல்லவேளை எனக்கு அப்படியான குறும்புத்தனமான குழந்தைகள் இல்லை என்றார்.

பிரீத்தி ஜிந்தாவின் தந்தை ராணுவ வீரராக இருந்தார். அவரது 13 ஆவது வயதில் கார் விபத்தில் அவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்! ஜனவரிமுதல் இயக்கம்!

SCROLL FOR NEXT