கங்குவா தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர்.  
செய்திகள்

ஹிந்தியில் குறைவான முன்பதிவுக்கு காரணம் என்ன? கங்குவா தயாரிப்பாளர் விளக்கம்!

கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஹிந்தியில் ஏன் முன்பதிவு குறைவாக இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

DIN

நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.

படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2டி மற்றும் 3டியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வியாழக்கிழமை (நவ.14) வெளியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நவ. 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாள்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஹிந்தியில் பெரிதாக புக்கிங் ஆகவில்லை எனக் கேள்வி கேட்டதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ஹிந்தியின் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை. பிவிஆர் உள்பட பல மல்டிபிளக்ஸில் நாளைதான் தொடங்குகிறது. தென்னிந்தியாவில் தனிப்பட்ட திரையரங்குகள் அதிகம், வட இந்தியாவில் இதற்கு மாறாக மல்டிபிளக்ஸ்கள் அதிகம். அதனால்தால் முன்பதிவு குறைவாக இருக்கிறது. அதனால் கவலை வேண்டாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

SCROLL FOR NEXT