புஷ்பா 2 படத்தின் டப்பிங்கை தொடங்கிய ராஷ்மிகா 
செய்திகள்

புஷ்பா 2 படத்தின் டப்பிங்கில் ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தின் பணிகளை முடிக்க உள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

DIN

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். டிச. 5 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

புஷ்பா - 2 திரைப்படத்தை உலகளவில் 11,500-க்கும் அதிகமான திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டப்பிங் பணிகளை தொடங்கியதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதில் படப்பிடிப்பு முடிந்தது வருத்தமாக இருப்பதாகவும் முதல் பாதிக்கான டப்பிங் முடிவடைந்து 2ஆம் பாதிக்கான டப்பிங் முடிவடையும் தருணத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமந்தாவுக்குப் பதிலாக இந்த முறை ஸ்ரீ லீலா நடனமாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

திராவிட மாடல் பெயர்க்காரணம் எதற்காக? -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

SCROLL FOR NEXT