மஞ்சரி, ஜாக்குலின் படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: மஞ்சரிக்கு மகனின் நினைவுகளைத் தூண்டிய விஜய் பாடல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமாரிடம் தனது மகனின் நினைவுகளை பகிந்துள்ளார் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமாரிடம் தனது மகனின் நினைவுகளை பகிந்துள்ளார் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி.

வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 6 பேரில் சிவாஜி பேரன் சிவக்குமார் மற்றும் மஞ்சரியும் அடங்குவர்.

மஞ்சரி பட்டிமன்ற பேச்சாளர் என்பதால், பிக் பாஸ் வீட்டில் உள்ள முத்துக்குமரனுக்கு போட்டியாக பெண்கள் அணியில் இடம்பெற்ற வலுவான போட்டியாளர் என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

ஆர்.ஜே. ஆனந்தி புத்திசாலித்தனமாக விளையாடினாலும், பேசுவதைத் தெளிவாகவும் பெண்கள் அணியின் கருத்துகளை வெளிப்படையாகவும் முன்வைப்பதில் மஞ்சரி சிறந்த போட்டியாளராகவே பார்க்கப்படுகிறார்.

மகன் குறித்து உருக்கம்

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாள் காலையும் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு நாள் தொடங்கும். அந்தவகையில் இன்று தெறி படத்தில் இடம்பெற்ற ஈனா மீனா டேக்கா என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

இதில் மகளின் சேட்டைகளைப் பொறுத்துக்கொள்ளும் தந்தையாக விஜய்யும், சுட்டித்தனங்கள் நிறைந்த குழந்தையாக நைனிகாவும் நடித்திருப்பர். இதனால் இந்தப் பாடல் பலருக்கும் விருப்பமான பாடல் எனலாம்.

ஒவ்வொரு நாளும் தெறி படத்தின் இந்தப் பாடலை தனது மகனுடன் சேர்ந்து பார்ப்பது வழக்கம் என்றும், இதில் வரும் சுட்டித்தனங்கள் எல்லாவற்றையும் அவனும் செய்வான் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தனது மகனின் சேட்டைகளை விடியோ எடுத்துவைத்து இந்தப் பாடலை வைத்தே எடிட் செய்வது தனது வழக்கமான பணிகளில் ஒன்று என்றும் கூறுகிறார்.

இந்தப் பாடலைக் கேட்டதும் எனது மகனின் நினைவு வந்துவிட்டதாகவும், குறிப்பிடுகிறார். இப்பாடலில் இடம்பெற்ற வரிகளையும் சுட்டிக்காட்டிப் பேசுகிறார்.

மகனின் நினைவில் உணர்ச்சிவயப்பட்டிருப்பதால், மஞ்சரிக்கு ஆறுதலாக அவரின் அருகிலேயே சிவக்குமார் நிற்கிறார்.

ஒவ்வொரு நாளும் உற்சாகமாக நாள் தொடங்க வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடல் ஒலிபரப்பப்படும். ஆனால், வீட்டை விட்டுவிட்டு வந்துள்ளதால், போட்டியாளர்களுக்கு சில பாடல்கள் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: அருணின் உடையைத் திருடி சிக்கிய ஆர்.ஜே. ஆனந்தி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT