ஹொம்பாலே ஃபிலிம்ஸின் புதிய பட அறிவிப்பு.  படம்: எக்ஸ் / ஹொம்பாலே ஃபிலிம்ஸ்
செய்திகள்

ஹொம்பாலே ஃபிலிம்ஸின் புதிய பட அறிவிப்பு..!

பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள புதிய படத்தின் போஸ்டர்.

DIN

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1, 2 திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் மாறியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தினை இயக்கினார். இந்தப் படத்தினையும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்தது. 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

ஹொம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார். சலார் 2 உள்பட பெயரிடப்படாத மற்ற இரண்டு படங்களிலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில், அஸ்வின் குமார் இயக்கத்தில் புதிய படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் க்ளீம் புரடக்‌ஷனுடன் இணைந்து தயாரித்துள்ளது.

இதன் முதல் பார்வை போஸ்டர் நாளை (நவ.16) மாலை 3.33 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

நம்பிக்கைக்கு பாதகம் வரும்போதெல்லாம் இவர் தோன்றுவார் என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்தப் படம் பான் இந்திய படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT