செய்திகள்

கங்குவா 12 நிமிட காட்சிகள் நீக்கம்!

கங்குவா படத்தின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது....

DIN

கங்குவா திரைப்படத்தில் இடம்பெற்ற 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையே, நேற்று (நவ.17) நடிகை ஜோதிகா படம் குறித்து விளக்கமான பதிவை வெளியிட்டு நெகடிங் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்பதிவு வைரலானதுடன், கவனத்தையும் பெற்றது.

இதையும் படிக்க: 40-வது வயதில் நயன்தாரா!

அதேநேரம், ரசிகர்கள் தரப்பிலிருந்து படத்தின் வசனம் மற்றும் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதை கருத்தில் எடுத்துக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் கங்குவா படத்தில் இடம்பெற்ற நிகழ்கால காட்சிகளிலிருந்து 12 நிமிடத்தை நீக்கியுள்ளது. இதனால், 2 மணி 22 நிமிடங்கள் ஓடக்கூடிய கங்குவாவின் புதிய வடிவம் விரைவில் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளில் கடுமையான எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்த கங்குவா, தற்போது ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

SCROLL FOR NEXT