முகப்பு
செய்திகள்

அமரன் வெற்றி..! படக்குழுவினருக்கு விருந்து வைத்த சிவகார்த்திகேயன்!

அமரன் படத்தின் வெற்றிக்காக படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்.

Updated On : 19 நவம்பர், 2024 at 3:55 PM
படக்குழுவுக்கு விருந்து வைத்த சிவகார்த்திகேயன்
பகிர்:

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்தப் படம் ரூ. 300 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் ’எஸ்கே 23’ என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் விருந்து வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.