மோகன்லால், ஜித்து மாதவன் 
செய்திகள்

ஆவேஷம் இயக்குநருடன் இணையும் மோகன்லால்!

ஜித்து மாதவனிடம் மோகன்லால் கதை கேட்டுள்ளது தொடர்பாக...

DIN

ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவனின் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் ஃபகத் ஃபாசில் நடித்த ஆவேஷம் படத்தின் மூலம் பிரபலமானார். உலகளவில் ரூ.150 கோடி வசூலை தாண்டியது.

நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்து அதிக வசூலைப் பெற்ற வெற்றிப் படமாக அவருக்கு அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஜித்து மாதவனிடம் மோகன் லால் கதை கேட்டதாகவும், விரைவில் அடுத்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை மோகன்லாலின் ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் மோகன்லால் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT