சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி?
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி இணைந்து நடிப்பதாகத் தகவல்...
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்த பாடல் அறிவிப்பு!
இதைத் தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய கதையாம். இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவும் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் படத்தில் ஜெயம் ரவி இணைந்திருக்கும் தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.