சூர்யா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, விஜய்.  
செய்திகள்

கங்குவா தோல்வி எதிரொலி? விஜய் ரசிகர்களுடன் தயாரிப்பாளர் வாக்குவாதம்!

பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எக்ஸ் தளத்தில் விஜய் ரசிகர்களுடன் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளார்.

DIN

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடக்கத்தில் சப்தம் பிர்சனை காரணமாக விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து படம் மெதுவாக நகர்கிறதென படத்தில் இடம்பெற்ற 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன.

பின்னர் படம் வெளியான முதல் இரண்டு வாரங்கள் திரையரங்க வளாகங்களில் விமர்சன்ங்களை ஒளிப்பதிவு செய்யக்கூடாதென கூறினார்கள்.

மோசமான விமர்சனங்களால் கங்குவா படம் ரூ.100-150 கோடி நஷ்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக தயாரிப்பாளர் தனஞ்செயன் எக்ஸ் தளத்தில் பொது மக்களுடன் காரசாரமாக விவாதித்தார்.

பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மீண்டும் விஜய் ரசிகர்களுடன் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளார்.

பிகில் படம் வெளியானபோது கைதி படத்தினை தயாரித்த இவர் ரசிகர் ஒருவர் தவறுதலாக கைதி படத்துக்கு முன்பதிவு செய்ததுக்கு, “உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு தம்பி, அறிவில்லை” எனக் கூறியது சர்ச்சையானது.

கங்குவா படத்தைப் புகழ்ந்து பேசிய எஸ்.ஆர்.பிரபு விமர்சனங்களை தடை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அதனால் விஜய் ரசிகர்கள், “ஜப்பான், என்.ஜி.கே படங்களை படங்களை தயாரித்தபோது அந்த அறிவு எங்கே போனது?”எனக் கேட்டனர்.

இதற்கு எஸ்.ஆர்.பிரபு, “என்னடா தம்பி ஒரு அடி திருப்பி அடிச்சதுக்கே 5 வருசமா கதறிகிட்டு இருக்கீங்க. மக்கள் பணி நிறைய இருக்கு, போய் அண்ணணுக்கு துணையா அடுத்த வேலைய பாருங்கடா! நல்ல மனுசன், அவரு பேர கெடுத்துட்டு திரியாதீங்க!!” என்றார்.

இதனை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஒரு தயாரிப்பாளர் இப்படிதான் பேசுவதா என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

எஸ்.ஆர்.பிரபு சூர்யாவின் உறவினர், கடந்த காலங்களில் ஸ்டூடியோ கிரீனுடனும் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT