சிவகார்த்திகேயன், ஆர்ஜே பாலாஜி.  
செய்திகள்

சிவகார்த்திகேயனை கிண்டல் செய்ததற்கு மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி!

இயக்குநரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டது குறித்து பேசியுள்ளார்.

DIN

ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் வெற்றி பெற்றது. அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார்.

இதற்கிடையே, அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கிற படத்தில் நடித்திருந்தார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் ஆர்ஜே பாலாஜி நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது:

தனியார் தொலைக்காட்சிக்காக ஒரு கிண்டல் செய்யும் நிகழ்ச்சியை நான் செய்தேன். அது 2014இல் என்று நினைக்கிறேன். அதில் விருது வழங்கும் நிகழ்வை கிண்டல் செய்வதுதான் குறிக்கோள். அந்த நிகழ்ச்சியில் அப்போது சிவகார்த்திகேயன் சில மேடைகளில் அழுது இருந்தார். நான் அதைக் கிண்டல் செய்திருந்தேன்.

அதை செய்யும்போது எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால், அதை டிவியில் பார்க்கும்போது எனக்கு மிகவும் தவறாக தோன்றியது.

பின்னர், நான் சிவகார்த்திகேயனுக்கு தொலைபேசியில் அழைத்தோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ மன்னிப்பு கேட்டேன் என்றார்.

சொர்க்கவாசல் படம் வரும் நவ. 29ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிக கனமழை எச்சரிக்கை: நெல்லை, தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு படை!

கேரளத்தில் படகு வீட்டில் திடீர் தீ விபத்து

துபை விமான கண்காட்சியில் பலியான விமானியின் கடைசி விடியோ

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

"மரியாதையா கேள்வி கேள்றா..!" பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாதக தலைவர் சீமான்

SCROLL FOR NEXT