சுற்றுலாத் தலமான மெய்யழகன் கிளிகள் வளர்ப்பு இல்லம்..! அனுமதி இலவசம்!
கார்த்தி, அர்விந்த் சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தில் வரும் கிளிகள் இல்லம் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார்.
நடிகர் கார்த்தி, அர்விந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்திருந்தனர்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
மெய்யழகன் திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி கிளிகளை வளர்த்துவரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
நிஜத்தில் சென்னையிலுள்ள சிந்தாதிரி பேட்டையில் சுதர்ஷன் என்பவர் கிளிகளை வளர்த்து வருகிறார். அங்குதான் இதன் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.
தற்போது இந்த இடம் சுற்றுலா தளமாக மாறியுள்ளது. இந்த வீட்டின் உரிமையாளரான சுதர்சன், வித்யா தம்பதியினர் ஒரு நாளைக்கு 25 நபர்கள் மாலை 4.30 மணிக்கு மேலாக இலவசமாக கிளிகளைப் பார்வையிடலாம் எனக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.