விடுதலை - 2 டிரைலர் தேதி!
விடுதலை - 2 டிரைலர் அப்டேட்...
விடுதலை - 2 படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் விஜய் சேதுபதி - மஞ்சு வாரியருக்கு இடையேயான காதல் காட்சிகள் இருக்கின்றன. மேலும், திட்டமிட்ட கதையை மாற்றி நீண்ட நாள் படப்பிடிப்பை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும்: ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ்!
இளையராஜா எழுதி இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ’தெனந்தெனமும்..’ பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நவ. 26 ஆம் தேதி நடக்கவுள்ளது. அன்றே டிரைலரும் வெளியிடப்படும் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.