செளந்தர்யா - ஜாக்குலின் படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: முதல் வாரத்திலிருந்து ஜாக்குலினுக்கு தொடரும் சோகம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொடர்ந்து 8வது வாரமாக தொகுப்பாளர் ஜாக்குலின் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார்.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொடர்ந்து 8வது வாரமாக தொகுப்பாளர் ஜாக்குலின் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார்.

அதுவும், இந்த வாரம் நாமினேஷனுக்கு நேரடியாக ஜாக்லின் தேர்வாகியுள்ளார். அவருடன் ரஞ்சித்தும் நேரடியாகத் தேர்வாகியிருக்கிறார்.

இவர்களுடன் சிவா, சாச்சனா, அன்ஷிதா, ரயான், ஆனந்தி, மஞ்சரி, விஷால், சத்யா ஆகியோரும் வெளியேற்றப்படும் (நாமினேஷன்) நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 8வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வார இறுதியில் நடிகை வர்ஷினி குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நேரடியாக வெளியேறும் நபர்களின் பட்டியலில் ஜாக்குலின் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியது முதல் இந்த வாரம் வரை, வெளியேறும் நபர்களின் பட்டியலில் ஜாக்குலின் இடம்பெற்றுள்ளார்.

எனினும், ஒவ்வொரு வாரமும் மக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பதன் மூலம் வெற்றி பெற்று பிக் பாஸ் போட்டியில் நீடித்து வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருப்பதால், இந்த வாரமும் ஜாக்லின் அதிக வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சாச்சனா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: வெளியேறிய வர்ஷினிக்காக பாடல் பாடிய போட்டியாளர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT