நடிகர் அஜித் குமார்  
செய்திகள்

குட் பேட் அக்லி பொங்கலுக்கு வெளியாகுமா? தயாரிப்பாளர் பதில்!

குட் பேட் அக்லி அப்டேட்...

DIN

குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு, இவருக்கான இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று (நவ.24) நடைபெற்ற புஷ்பா - 2 நிகழ்வில் கலந்துகொண்ட மைத்ரி மூவிஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, ”குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 7 நாள்களில் முடிவடையவுள்ளது. படமும் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். விரைவில், தேதியை அறிவிப்போம். தமிழில் எங்கள் முதல் படமான இது மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

SCROLL FOR NEXT