நடிகை கஜோல் 
செய்திகள்

படப்பிடிப்பை முடித்த கஜோல்..! நெகிழ்ச்சியான பதிவு!

நடிகை கஜோல் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்ததாக தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

DIN

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

குறிப்பாக, 'தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கே' திரைப்படம் இந்தியாவிலேயே அதிக நாள் திரையிடப்பட்ட படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. 

தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ’மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார். இறுதியாக, தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். 

சர்ச்சையும், சாதனையும்

'தி ட்ரையல்' எனும் புதிய படத்திற்காக இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை நீக்கி சர்சையானது குறிப்பிடத்தக்கது. பின்னர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்து அசத்தினார்.

கரண் அர்ஜுன் படம் நவ.22இல் ரீ-ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் காவல்துறை அதிகாரியாக டோ பட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் கிருத்தி சனோன், ஷகீர் ஷெய்க் உடன் நடித்திருந்தார்கள்.

’மஹாராணி: குயின் ஆஃப் குயின்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை சரண் தேஜ் உப்பலாபடி இயக்கியுள்ளார். பிரபுதேவா, நஸ்ருதீன் ஷா, சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு தேவாவுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜுவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார்கள். இந்தப்படம் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது, புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். எந்தப் படம் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தினைப் பகிர்ந்து கஜோல் கூறியதாவது:

அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இன்னுமொரு குடும்பம் பிரிந்தது. இன்னுமொரு மாரத்தான் முடிந்தது. இந்த அற்புதமான அழகான அனுபவங்களுக்கு படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். செங்குப்தா, பீனா ஆண்டி நீங்கள் இருவரும் கேக்கினையும் இந்தப் புகைப்படத்தினையும் இழந்தீர்கள். ஆனால், அதைவிடவும் நாங்கள் உங்களை அதிகமாக மிஸ் செய்கிறோம். விரைவில் சந்திப்போம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT