நாக சைதன்யா - சோபிதா துலிபாலா. 
செய்திகள்

நாக சைதன்யா - சோபிதா திருமணப்பட உரிமையைப் பெற்ற நெட்பிளிக்ஸ்?

நாக சைதன்யா - சோபிதா திருமணப்படம் குறித்து...

DIN

நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண ஆவணப்படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

இருவரும் தங்களின் காதலை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், கடந்த ஆக.8 ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தத் திருமண நிகழ்வை ஆவணப்பட பாணியில் காட்சிப்படுத்தும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 50 கோடிக்கு பெற்றுள்ளதாம்.

ஏற்கனவே, நடிகை நயன்தாராவின் திருமணப்படத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT